Sunday, January 13, 2013

உண்மை எழுதினேன் (பாகம்- 4) - [Karthick Meets Jessi]



டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ டைரக்டர்  பொறுப்பல்ல...   


ஆறு மாசம் காலேஜ் லைப் நல்ல படிய தான் போச்சு ஆனா ஜெஸ்ஸி கிட்ட தான் என்னால நெருங்கவே முடியல.  
இத்தன நாளா அவள தூரமா தான் சைட் அடிச்சிட்டு இருந்தேன். நண்பர்களுக்கும் என் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. அவள சைட் அடிக்காதவன் எவனும் இல்ல. பத்தோட பதினொன்னா என்னையும் நெனச்சி லூசுல விட்டுட்டாங்க.
இப்படியே போய்ட்டு  இருந்த அந்த லைப்ல ஒரு நாள்...
வழக்கம் போல் இல்லாம அவ ஏறுற பஸ் ஸ்டாப்கும் நெக்ஸ்ட் ஸ்டாப்ல வெயிட் பண்ணேன். அவ போற பஸ்ல போய் அவள பாத்துகிட்டே போணும்னு ஒரு சின்ன ஆசைல..
ரொம்ப நேரம் வெயிட் பண்ணதுக்கு அப்புறம் ஒரு கூட்டமே இல்லாத பஸ் வந்துச்சு.. அவ இல்லன்னு தெரிஞ்சது. அதுல இருந்த சில பிரெண்ட்ஸ் என்னை ஏற சொன்னங்க. பிரெண்ட்க்கு வெயிட் பண்ணுறேன்னு ஒரு பொய்ய சொல்லி எஸ்கேப் ஆனேன்.
தூரத்துல கூட்டமா ஒரு பஸ் வந்தாலே அது நான் ஏற வேண்டிய பஸ்ஸா தான் இருக்கும். நெனச்சது போல் அதுல அவ இருந்தா. ஒட்டு மொத்த காலேஜ்ம் அந்த பஸ்ல இருந்தது.
பஸ் நின்னது ஒருத்தனும் இறங்கல ஒருத்தனும் ஏறல.புட்போர்டுல கூட நிக்க இடம் இல்ல. பஸ்லந்து ஒரு சவுண்ட் மட்டும் வந்துச்சு. மச்சான் அடுத்த பஸ்ல வாடான்னு. குரல கேட்ட இப்ரம் போல இருந்தது.
[மனதில்] - ஒ அவன், அவன் ஆள கரெக்ட் பண்ண அந்த பஸ்ல வரான்.  
கண்டக்டர் விசில் அடிக்க பஸ் கிளம்பியது. இந்த பஸ்ஸ விட்டா லைப்ல ஏதோ மிஸ் பண்ண போற மாதிரி இருந்துச்சு. ஓடி போய் பஸ்ல ஏற முயற்சி பண்ணேன். பட் என்னால முடியல.. அடுத்த பஸ்ல வா பான்னு நாலு பேரு திட்டி என்ன ஏற விடல..
அன்றும் வழக்கம் போல் லேட்........
ஒரு நாள் மதியம் லைப்ரரில ஜெஸ்ஸிய தனியா மீட் பண்ணேன். இந்த சான்ஸ்ஸ விட கூடாதுன்னு அவ கிட்ட பேச முயற்சி பண்ணேன்.
Phonetics and English… ஒரு புக் படிச்சிகிட்டு இருந்தா. தைரியத்த வர வச்சிக்கிட்டு போய் பேசினேன்.
எக்ஸ்குயூஸ் மீ...இந்த புக்க இங்க படிச்சிட்டு ரிட்டன் பண்ணிடிவிங்களா   இல்ல எடுத்துட்டு போய்டுவிங்களா? இந்த புக்க ரொம்ப நாலா தேடிகிட்டு இருக்கேன். [மனதில்] -(அந்த புக் எதபத்தினு கூட தெரியாது)
ஜெஸ்ஸி: (என்னிடம் கேட்ட முதல் வார்த்தை) நீங்க எந்த டிபாட்மென்ட்?
நான்: ட்ரிப்ல்இ. மை நேம் இஸ் கார்த்திக்? யுவர் நேம்?
ஜெஸ்ஸி: லுக் கார்த்திக். எங்க டிபாட்மென்ட்ல மத்த டிபாட்மென்ட் பசங்க கூட பேச கூடாதுன்னு சொல்லிருக்காங்க? நீங்களும் எதுக்கு வந்து தேவை இல்லாம பேசுறீங்கன்னு எனக்கும் தெரியுது. சோ ப்ளீஸ் கீப் அவே? ன்னு சொல்லி புக்க டேபிள்ல வச்சா.
நான்: [மனதில்] – (இந்த புக்க ஏன் தள்ளி வைக்கணும்னு சொல்லுரா...) என்னங்க இப்டி பேசுனா எப்டி? அப்போ மத்த டிபாட்மென்ட் உங்கிட்ட எப்டிங்க பேசுறது?
ஜெஸ்ஸி: ஏன் பேசணும்? லுக் ட்ரிப்ல்இ மெக் பசங்க கொஞ்சம் ரௌடி பசங்களா இருப்பாங்கன்னு என் கிளாஸ் மேட் அட்வைஸ் பண்ணிருக்காங்க
நான்: [மனதில்] – (எனக்கு முன்னாடி எத்தனை பேரு  இந்த புக்க கேட்டான்களோ தெரியல.. இப்பிடி எரிஞ்சி விளுரா) சரி மேடம் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குறிங்க ... சாப்ட்வேர் இஞ்சினியர், ஏசி ரூம்ல வொர்க் பண்ணுவிங்க. நாங்க ட்ரிப்ல்இ முடிச்சிட்டு ரௌடியிசம் பண்ண போய்டுவோம்.. நம்ம பஸ்ட் இயர் தான் படிக்குறோம் காமன் சிலபஸ்  காமன் சப்ஜெக்ட் தான். இன்னும் ரௌடியிசம் பேப்பர் வரல...அது வரைக்குமாவது நீங்க பதில் சொல்லலாம்..
ஜெஸ்ஸி: (ஜோக்குக்கு சிரிச்சா பட் காட்டல) அதே கோவத்துடன் உங்களுக்கு புக் வேணுமா போய் லைப்ரரில ரிசப்சன்ல செக் பண்ணுங்க. என்கிட்ட கேக்காதிங்க.
நான்: தேங்க்ஸ்..................
இவ்நிங் ஒரு நாள் கூட அவ போற பஸ்ல போனது இல்ல. என் கேங் அந்த நாலு பேரோட தான்
எல்லா பசங்களும் போனதுக்கு அப்புறம் தான் நாங்க கிளம்புவோம்..
சோ இவ்நிங் ஜெஸ்ஸிய பஸ்ல பாக்க வழியே இல்ல...
ஒரு நாள் என் பிரண்ட்ஸ் யாரும் வரல. தனியா தான் இவ்நிங் போனேன். ஜெஸ்ஸி மட்டும் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தா. இது ஒரு நல்ல சான்ஸ் வேகமா நடந்தேன் வழியில மேரி (என் கிளாஸ் மேட்) மீட் பண்ணேன்.
மேரி: என்ன கார்த்திக் இன்னைக்கு உன் பிரண்ட்ஸ் யாரும் இல்ல
நான்: எஸ் மேரி, எல்லாம் சொல்லிவச்ச மாதிரி லீவ்.
மேரி: நீ இந்த டைம்க்கு வரும் போதே எனக்கு தெரியும்.
நான்: சரி வா வீட்டுக்கு தான போற அடுத்த பஸ் புடிக்கலாம்.
மேரி: அதுக்கு சான்ஸ்எ இல்ல
நான்: பட் ஒய்?
மேரி: நீ இதுக்கு முன்னாடி இந்த டைம்க்கு போனது இல்லல அதான் உனக்கு தெரியல
நான்: ஒன்னும் புரியல
மேரி: நீ வேணா இந்த பஸ்ல போ. நான் அடுத்த பஸ்ல வரேன்.
நான்: சத்தியமா புரியல... எனிஹவ் ஐ ம் லீவிங் நவ்.. ஓகே
மேரி: ஓகே
பேசிகிட்டே நானும் மேரியும் பஸ் ஸ்டாப்க்கு வந்தோம். பஸ் ஸ்டாப்ல யாரும் இல்ல.
இருந்த ரெண்டு முணு பேரும் அருகில் இருந்த பொட்டி கடைல இருந்தாங்க.
மேரி மட்டும் இல்லனா இது ஒரு நல்ல சான்ஸ். கண்டிப்பா ஜெஸ்ஸி கிட்ட எதாவது பேசிருப்பேன்.
மேரியும், ஜெஸ்ஸியும் கொஞ்ச நேரம் எதோ பேசிகிட்டாங்க. basicalலா  அவங்க ரெண்டு பெரும் பொண்ணுங்க அந்த ஒரு எளிஜப்ளிட்டி போதும் ரெண்டு பேரும் பேசிக்க. மேரி என்ன இன்ட்ரோ கொடுப்பானு நினச்சேன், பட் அவ அத பன்னல...
துரத்துல ஒரு பஸ் வருது. 
நான்: மேரி வா இந்த பஸ்ல போலாம். பஸ் ப்ரீயா தான் இருக்கு, பஸ் ஸ்டாப்ளையும் கூட்டமே இல்ல..
மேரி: நீ போ கார்த்திக். ஐ வில் கேட்ச் தி நெக்ஸ்ட் பஸ்.
நான்: ஒய்..?!?!!?! ஓகே பாய் மேரி...
சந்தோசமா பஸ்ல ஏற போனேன்.
ஜெஸ்ஸிகிட்ட பஸ்ல யாவது எதாவது பேசலாம்னு.
ஜெஸ்ஸி முன்னால ஏறுனா, நான் பின்னால ஏற போனேன்.
எங்கிருந்து வந்தானுங்கனு தெரியல ஒரு கூட்டமே என்ன தள்ளி விட்டுட்டு பஸ்ல ஏறினது. கொஞ்சம் நேரத்துல பஸ் புல் புட்போர்ட்ல கூட இடம் இல்ல.


மறுபுடியும் புட்போர்ட்.. கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஏற தெரியமா ஏறி திட்டு வாங்கி எறங்கினேன்..பஸ் ஸ்டாப் ல போய் உக்காந்தேன்.
மேரி என்ன பாத்து நக்கலா சிரிச்சா..
அவ சிரிப்பிலே புரிஞ்சது இது டெய்லி நடக்கருது தானு. இப்போ வரைக்கும் பஸ் ஸ்டாப்ல யாரும் இல்ல. இப்போ இத்தனை பேரு எங்கேந்து வந்தானுங்க..ஒன்னும் புரியல
மேரி: இது தினமும் நடக்கருது தான் கார்த்திக்... எல்லோரும் இந்த டி கடை உள்ள தான் இருப்பாங்க. அவ பஸ் ஏறுன உடனே கூட்டம் அந்த பஸ்ல தான் இருக்கும்...என்ன கார்த்திக் நியும் அவ பின்னாடி சுத்துரியா  என்ன?
நான்: வாட்... எவ பின்னாடி?
மேரி: அவ தான் ஜெஸ்ஸி? கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபாட்மென்ட் பிகர்...
நான்: நோ நோ.... என்ன பாத்த அப்டியா இருக்கு? அவ என்ன பெரிய ?....(மனசு வலிச்சது இப்டி பேச)
மேரி: அவளுக்கு என்னப்பா  ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண பாத்து சைட் அடிக்கற அளவுக்கு பிகரா இருக்கா....
நான்: (கேக்க கொஞ்சம் சந்தோசமா இருந்தாலும் வெளில என்னால சொல்ல முடிச்சந்து) ஐ டோன்ட் கேர்.
அடுத்த பஸ் ப்ரீயா வர மேரி அதுல போலாம்னு சொன்னா. எனக்கு கொஞ்சம் வேல இருக்குனு சொல்லி நான் மட்டும் பஸ் ஸ்டாப் ல இருந்தேன்.
மேரி, வந்த பஸ்ல ஏறி போய்ட்டா...
நான் மட்டும் பஸ் ஸ்டாப் ல தனிய யோசிச்சேன்.
எப்டி பாத்தாலும் அவள நெருங்க முடியாது போல...கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல. லைப்ரரில சிரிப்போட கோவம் கலந்து பேசனது நியாபகம் வந்துச்சு..கொஞ்சம் நம்பிக்கையும் வந்துச்சு.
வாய்ப்பு எதிர்பாக்குறவன் முட்டாள்.
கெடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணுறவன் அதிஷ்ட சாலி...
வாய்ப்பை உருவாக்குறவன் புத்தி சாலி...
வாய்ப்பை எதிர் பாக்கறத விட்டுட்டு உருவாக்கணும்னு  நினச்சேன்...உருவாக்கினேன்....


------------------------------------------------------------
தொடரும் ...

Friday, September 7, 2012

உண்மை எழுதினேன் (பாகம்- 3) - [Karthick Meets Jessi]


டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ டைரக்டர்  பொறுப்பல்ல...   


சனி ஞாயறு...  ரெண்டு நாள் ஹஸ்டல அவள பத்தி யோசிச்ட்டு இருந்தேன்....

மண்டே எப்போட காலேஜ் போவோம்.... அவள பாப்போம்னு இருந்துச்சு....மண்டேயும் வந்துச்சு...

இதுவரை ட்ரஸில் இருந்து சாப்பாடு வரை எல்லாமே அம்மா ரெடியா வச்சிருபாங்க. ஒரு ராஜா வீட்டு கன்னுகுட்டிய தான் இருந்தேன். ஆணா இன்று முதல் என் டிரஸ்அ நானே துவைக்கணும் அயனும் பண்ணனும், என் சாப்பாட நானே பாத்துக்கணும்..

அம்மாவோட அருமை தெரிய ஆரமிச்ச நாள்னு கூட சொல்லலாம். “வாழ்கை ஒரு வட்டம் டா னு இளையதளபதி சொன்னது ஞாபகம் வருது.

எப்படியோ ஒரு வழியா காலேஜ் கிளம்பிட்டேன். நல்ல படிய தான் காலேஜ்க்கும் போனேன்... என் ராசின்னு ஒண்ணு இருக்கு எவளோ சீக்கரமா கிளம்பினாலும் லேட்...

This is my prayer to thee, my Lord -- strike, strike at the root of penury in my heart.Give me the strength lightly to bear my joys and sorrows.Give me the strength to make my love fruitful in service.Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.Give me the strength to raise my mind high above daily trifles.And give me the strength to surrender my strength to thy will with love.

தூரத்தில் காலேஜ் பிரேயர் கேட்குது. ப்ரேயர் முடியற வரை வெயிட் பண்ணி, முடிஞ்சதுக்கு அப்புறம் தான் உள்ள போனேன். அதுவரை செக்யூரிட்டி மணி அண்ணாகிட்ட என்னை நானே அறிமுக படுத்தி பேசிட்டு இருந்தேன்.

உள்ள நுழைந்தவுடன் லெப்ட்ல ஒரு பெரிய workshop. நேரா போன என்னோட பில்டிங். கீழ் ப்ளோர்ல ஒரு பெரிய டிராயிங் ரூம். அடுத்த ரூம் என்ட்ரன்ஸ்ல Head of the Department. அத தாண்டி போன ஸ்டெப்ஸ். இந்த பில்டிங் முன்னாடி ஒரு ப்ரேயர் ஹால். இத எல்லாத விட முக்கியமான ஒன்னு ஜெஸ்சி. அவ எங்கனு தேட போய் தான் இத எல்லாத்தையும் கவனிச்சேன்.

வழியில் எதிரே வந்த ஒருவனிடம் கேட்டேன்..

E.E.E டிபாட்மென்ட் எங்க பாஸ்?

பஸ்ட் ப்ளோர் செகேன்ட் கிளாஸ்....

தேங்க்ஸ் சொல்லி என் கிளாஸ் உள்ள போனேன்.

எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. புதுசான நண்பர்கள், புதுசான சூழ்நிலை காலேஜ் பர்ஸ்ட் டேயே பல நண்பர்கள் அறிமுகமானார்கள்.

நான் போய் சேந்த கேங் இதன்


இவங்கள பத்தி போக போக தெரிஞ்சிக்கலாம்.

இப்ராம்கான்..... பர்ஸ்ட் டேவே ஒரு பொண்ண புடிச்சிடான். அவளும் ஒரு முஸ்லிம் தான். கண்டதும் காதல்...

கவிதை எழுதுறது என் பழக்கம்னு பேப்பர் பேனா வோட இருந்தான். என்கிட்ட கவிதையா சொல்லி மொக்க போட்டான்.....

அல்மோஸ்ட் ஹாப் டே போய்டுச்சு. என் கிளாஸ் உள்ள எல்லா பொண்ணையும் செக் பண்ணியாச்சு. அட்டெண்டன்ஸ் வரைக்கும் வெரிபை பண்ணியாச்சு. ஜெஸ்சி என் கிளாஸ் இல்ல.

எப்படி டா கார்த்திக் அவ கூட பேச போற பழக போற... ஒன்னும் புரியல.. 

ஒரு செகண்ட் யோசிச்சேன்...

நான் ஏன் ஜெஸ்சிஐ தேடுறேன்? அவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? எனக்குள் பல கேள்வி? 

இவனோ கவிதை மேல கவிதையா சொல்லி உசுர வாங்குறான்.

லஞ்ச் டைம் வந்துச்சு. காதுல ரத்தம் வராத கொறைய கிளம்பி வெளியே வந்தேன்.
  
ஆப்போசிட்ல உள்ள கடைல சாப்டிட்டு கிளாஸ்கு போற வழியில் எல்லாம் பேசிட்டே போனோம்.

ராஜா: இனாகுறேசன் அன்னைக்கு ஒரு பொண்ணா பாத்தேன் டா. செம பிகர். அவ எந்த கிளாஸ் மச்சி.

இப்ராம்: ஆமாம் மச்சி அவள தான் நானும் தேடுறேன். அவ கம்ப்யூட்டர் சயின்ஸ்னு நினைக்குறேன்.

ராஜா: நீ அவள பாத்திய கார்த்திக்?

நான்: இல்ல டா..
(மனசுக்குள்: ஒ..கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆ. அவள தான் காலைல இருந்து தேடிட்டு இருகேன். இவன் நம்ம கூட தானா காலையில் இருந்து இருந்தான்..இவனுக்கு எப்டி அவ டிபாட்மென்ட் தெரிஞ்சிச்சு?... அவள இந்த மாதிரி எத்தனை பேரு தேடுறான்களோ.?!?!?!?!....)

மகேன்: இந்த லவ் பண்ணுறவன், பொண்ணுங்க பின்னாடி நாய் மாதிரி சுத்தறவங்க தயவு செஞ்சி ஓடி போய்டுங்க.

சக்கரவர்த்தி: அவனுங்கள விடு மச்சி. பொண்ணுங்களை பத்தியே பேசிட்டு...

மகேன், சக்கரவர்த்தி இந்த ரெண்டு பேருக்கும் பொண்ணுங்கனாவே புடிக்கல. சக்கரவர்த்தி, அவன் அத்தை பொண்ண லவ் பண்ணுறான். அவள பத்தி மட்டும் தான் பேசுவான்.
மகேன் சுத்தம், எந்த பொண்ண பத்தியும் பேச மாட்டான்.

இப்ராம், ராஜா இவங்க ரெண்டு பெறும் அப்டியே ஆப்போசிட். இவங்க ரெண்டு பேரும் எப்போதுமே கேல்ஸ்.. கேல்ஸ்.. கேல்ஸ். வேற எத பத்தியும் பேச மாட்டனுங்க.

Head of the Department ரூம் வெளியே அன்று பாத்த அதே தேவதை

பட் இன்னிக்கு

வைட் சுடி,
வைட் சாண்டல்,
வைட் Ear ring,
வைட் வாட்ச்,
செம ஸ்லிம்...                                         

மனசுக்குள்: உங்களுக்கு மட்டும் எப்பிடிரி இப்படியெல்லாம் costume கிடைக்குது?

பின்னாடி நடந்த நான் கொஞ்சம் வேகமா முன்னாடி நடந்தேன்.
வேகமா நடந்து அவள கிராஸ் பண்ணேன்.

நேராக பார்த்து சென்ற அவள் என்ன கிராஸ் பண்ணும் பொது ஒரு செகண்ட் என்ன பாத்துட்டு போனா...

ஒ மை காட்.. அவ்ளோ அழகு..

அடுத்த நிம்சமேஅப்புறம் என்ன.......லவ் தான்

நான் ஏன் ஜெஸ்சிஐ தேடினேன்னு அப்ப தெரிஞ்சிச்சு...
கண்டதும் காதல் எனக்கு வர கூடாத என்ன?

எஸ் ஐ வாஸ் இன் லவ்...
------------------------------------------------------------
தொடரும் ...


Tuesday, August 7, 2012

உண்மை எழுதினேன்...(PART 2)

டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல...   

திருச்சிராப்பள்ளி உங்களை அன்புடன் வரவேற்கிறது.



அண்ணா இந்த பஸ் கே.கள்ளிக்குடி போகுமா?

போகும்... போகும்.. முறைத்த படி கூறினார் – கண்டக்டர்

ஏன் இவ்வளோ எரிச்சல்னு மனசில நினைச்சிட்டு என் அப்பாவையும் அம்மாவையும் சீட்ல உக்கார வச்சுட்டு, நானும் போய் உக்காந்தேன்..



சத்திரம் பஸ் ஸ்டான்ட்ல இருந்து பஸ் கிளம்பியது.

திருச்சி இஸ் பேமஸ் பார் பிகர் மச்சி.. ஐ.ஜி காலேஜ் , ஹோலி கிராஸ் காலேஜ் பொண்ணுங்க கைல மாட்டின உன்ன ஓட்டு ஓட்டுனு ஓட்டி எடுத்துருவாங்கடான்னு நண்பன் Sivapunniyam karthikeyan. சொன்னது ஞாபகம் வருது. அவன் இந்நேரம் shanmuga polytechnicல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்
.
என்னப்பா கள்ளிகுடிக்கு இன்னைக்கு இத்தனை பேரு போறீங்க – கண்டக்டர்.

காலேஜ் first டே அதான்.

எந்த காலேஜ் பா..

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் [Infant Jesus polytechnic ]

ஒ புதுசா கட்டிருக்காங்கலே அதுவா..

அதே தான்ணா. வந்துச்சுன சொல்லுங்கணா..

சரி சரி...

இந்த ஐ ஜி அப்புறம் ஹோலி கிராஸ் காலேஜ் விடுற டைம் எண்ணணா?

உன் பேரு என்ன?

கார்த்திக்.. என்று சிரித்தேன்.

தம்பி வந்த அன்னைகே லேடீஸ் காலேஜ்-அ விசாறிக்கிற, இது நல்லதுக்கு இல்லப்பா.

இல்லணா அந்த டைம்ல இந்த பக்கம் வர மாட்டேன்ல..
.
அது சரி.. நம்பற மாதிரி எதாவது சொல்லுனு சிரித்தார் – கண்டக்டர்.

எனது அம்மா முறைக்க...Sivapunniyam karthikeyan.எப்பவும் போலவே தவறான இன்பர்மேசன் கொடுத்துருகான்னு மட்டும் தெரியுது.

பஸ் மார்க்கெட்டை தாண்டி பாலக்கரை, கன்டோன்மென்ட், ரயில்வே ஸ்டேஷன் வழியா சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் வந்தது.

பஸ்சில் இளையராஜாவின் புன்னகை மன்னன் BGM கேட்க அவள் அங்கே அதே பஸ்சில் ஏறினாள்.

அருகில் இருந்த அவ பிரண்டு, “ஜெஸ்சி இந்த பஸ் போகும், பாத்து போஎன்றாள்.

ஜெஸ்சி –
ப்ளூ கலர் சுடிதார்ல வைட் கலர் ப்லோவேர்ஸ்,
வைட் கலர் ஷால்..
ப்ளூ கலர்லையே  வாட்ச்,பொட்டு, இயர்ரிங்,
வைட் கலர் செருப்பு. அவ ரொம்ப 
மேக்அப் இல்லாம சிம்ப்ள ப்ளூ அண்ட் வைட் beautiful சைட் சொல்லுற மாதிரி ஒரு ஸ்லிம் பிகர். 

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ...அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

அவள் அழகு என்ன அப்டியே புரட்டி போட்டுச்சு. ஏனோ என் கண்கள் அந்த ப்ளூ பிகர் கிட்டயே இருந்துச்சு.

பஸ் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பியது.

அவளை பார்த்தவுடன் கவிதை  எல்லாம் எழுத முயற்சி பண்ணேன்.
ஒன்னும் வரல. எனக்கு தெரிஞ்ச ஒரே கவிதை,

“மரத்துல இருக்குது காய்... மரத்துல இருக்குது காய்...
தூங்க தேவ பாய்... தூங்க தேவ பாய்..

பஸ் கருமண்டபம், நேஷனல் காலேஜ், பால் பண்ணை, தீரன் நகர் தாண்டி ராம்ஜி நகர் வந்துச்சு

கண்டக்டர் வந்து கள்ளிகுடி நெக்ஸ்ட் ஸ்டாப்னு சொல்ல..

இவளோ சிக்கரமா காலேஜ் வந்துச்சுனு நொந்த படி இறங்கினேன்.
அவளுக்கு சீட் கிடச்ச சந்தோசம், உதட்டுல சின்ன புன்னகயொட போய் உக்காந்தா.



மறுபடியும் அவள பாக்க முடியுமோ முடியாதோன்னு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். அவ இருக்கும் அந்த பஸ் எண்ண கடந்து போகுது

இங்க எண்ண சொல்லுது...ஜெஸ்ஸி ஜெஸ்சினு சொல்லுதுல என மனசாச்சி வேற சவுண்ட் விடுது. 
என்னங்கட இது First day காலேஜே இப்பிடியா...என்று காலேஜ் நோக்கி போனேன்.

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் இனாகுறேசன்.

உள்ளே நுழையும் போது
இன்விடேசன் இருக்கா? – செக்யூரிட்டி

பேகில் இருந்த இன்விடேசன் காட்டி உள்ளே போனேன்.

உள்ள Buffet  சாப்பாடு ரெடியாக இருந்தது. யார் யாரோ மேடையில் பேசி கொண்டு இருக்க. என் மனமோ ஜெஸ்சியின் மயக்கத்திலே இருந்தது.

Buffet லஞ்ச் எப்டி சாப்டுறதுனு தெரியாத ஒரே காரணத்தால் அந்த Function முடிஞ்ச உடன் சாப்டாமலேயே கிளம்பினேன்.

Monday ல இருந்து காலேஜ் கிளாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு யாரோ சொல்லி கேட்க.. 

சரி கிளம்பலாமா போர வழியில் எதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிடலாம். 

இங்கலாம் சாப்ட எப்படா கத்துக்கபோறனு – அப்பா

நானோ ஜெஸ்சி படிக்கும் காலேஜ்-அ கண்டுபிடிக்கணும்னு யோசிச்சபடி, கத்துக்கிறேன்  கத்துக்கிறேன் ... என சில பல கடுப்புகளில் கிளம்ப எதிரே ஜெஸ்ஸி இதே காலேஜ்க்கு வர்றா !!! 

தொடரும்....

Friday, August 3, 2012

உண்மை எழுதினேன்...(PART 1)

Karthick Leaving to Coimbatore

பள்ளி மற்றும்   கல்லூரி  வாழ்வில்  நடந்த சில  சம்பவங்களே  இந்த  கதையின்  மூல  காரணம்  ஆகும்.


டிஸ்கி: இந்த   கதையில்  வரும்  சம்பவங்கள்  மற்றும்  கதாபாத்திரங்கள்  அனைத்தும்  கற்பனையே! ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல     


இன்று 

சரியான மழை செமஸ்டர் எக்ஸாம் முடிச்சுட்டு  college canteenசுரேஷ் காக  wait பண்ணிட்டு இருந்தேன்.

அவன் வந்தான்
 டேய் எங்கடா மூட்ட முடிச்சோட கிளம்பிட்ட?

Coimbatore போறேன் டா. உன் கார்ல என்ன கொஞ்சம் ஏர்போர்ட் ட்ராப் பண்ண முடியூமா மச்சி ? 

வாட்  Coimbatoreகு  flightல போறியா? அப்டி என்ன முக்கியமான மேட்டர்.

என்  Diploma friend Mohan Reception...
Actuallல இது ஒரு திருட்டு கல்யாணம் தான். பொண்ணு வீட்டுக்கு தெரியாது இன்னும். 
போட்டோ எடுக்க வேற என்ன கேமராவோட வர சொன்னான்.

டேய் முன்னெல்லாம் திருட்டு கல்யாணம் எல்லாம் பயந்து பயந்து பண்ணுவாங்க. நீங்க என்னடானா  reception!.... அதுக்கு நீ  போட்டோ எடுக்க  flightல போற. எல்லாம் கொஞ்சம் ஓவரா  தான் இருக்கு. 


மச்சி அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் friendறா.


சரி சரி கார்ல ஏறு.


SRM University இருந்து கார்ஏர்போர்ட் செல்கிறது

நேத்து கூட உன்கிட்ட பேசினேன்   Coimbatore போறத பத்தி ஒன்னும் சொல்லல.
சரி சரி   flight எத்தனை மணிக்கு 

4:10க்கு  மச்சி.

டேய் நீ என்ன லூசாட டைம் இஸ் நவ்   1:30 டா.

மச்சி I know that . என்னால இப்போ வீட்டுக்கு போயிட்டு வர முடியாது . More over I don't trust Chennai City traffic. 

போர் அடிக்குமே டா. 3 மணி நேரம் என்ன பண்ண போற?

சுஜாதா புக்  ஒன்னு இருக்கு. அத படிக்க ஆரம்பிச்சா அப்படியே டைம் போறது தெரியாது மச்சி....

புக் சைஸ் சின்னதா தான் இருக்கு. எப்படியும் அத அரை மணி நேரத்துல படிச்சி முடிச்சிடுவ. அப்புறம் என்ன பண்ணுவ? நீ எதோ கதை எழுத போறனு சொன்னியே என்ன ஆச்சு?

தலைவர் சுஜாதா ஸ்டைல் humor. கௌதம் மேனன் ஸ்டைல்  Narration ல எழுத ட்ரை பண்ணுறேன். ஒன்னும் முடியல மச்சி.

Flightக்கு டைம் இருக்கு. வா அப்டியே ஒரு Barக்கு  போய் இத பத்தி பேசுனா என்ன?

வேணாம் மச்சி கண்டிப்பா நான்  flightஅ  மிஸ் பண்ணிடுவேன் ஆள விடு.

கார் ஏர்போர்ட்  நுழையூம் போது மழை விட்டிருந்தது.


Chennai Airport
சரி மச்சான் ஏர்போர்ட் வந்துடுச்சு. வில் கெட் பேக் டு யூ

மச்சி உன் Wife  எங்க?

அவ already  ஈரோடு போய் அவுங்க  அப்பா வீட்டுல இருக்கா. அவ  Receptionகு அப்டியே வந்துடுவா
.
அட பாவி அப்ப, வீட்டுல நேத்து யாரும் இல்லையா?  சொல்லிருந்த ஒரு FULLலோட வந்துருபேன்ல

மச்சி போதும் உன் ஹெல்ப். தேங்க்ஸ். பை பை.

டேக் கேர் டா . Bye Bye...

காரில் இருந்து இறங்கி ஏர்போர்ட் உள்ளே சென்றேன்.
எனது போர்டிங் பாஸ் வாங்க  Queue வில் நின்றேன்.

HelpDesk: Sir which Seat  do you prefer?

வின்டோ சீட் என்று கேட்டு வாங்கிய உடன் என் மனதில் பல எண்ணங்கள் ஓட தொடங்கியது. பல முறை இந்த சீட்டுக்கு பஸ்சில் அடித்து கொள்வோம்.

ஆனால் அவள் ஒருத்திக்கு மட்டும் தான் இந்த சீட்டை விட்டுகொடுத்து இருக்கேன். ஆனால் இப்போ அவ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது

இதே  coimbatoreகு பல முறைஅவளை தேடிபோயிருபேன். 

போர்டிங் பாஸ் வாங்கிய உடன் சுஜாதாவின் புக்க படிக்க ஆரம்பிச்சேன்.

சுரேஷ் சொன்னது போல் அந்த புக்க 30 நிமிடத்தில் படிச்சு முடிச்சிட்டேன்.

ஒரே  பிகரா இருந்துச்சு. 
எனக்குஅவ ஞபாகம் வந்துச்சு. எவ்ளோ நேரம் அவர்களை சைட் அடிச்சாலும் அவளை போல் ஸ்டைல யாரும் இல்ல ..

இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்
பசங்க யாருக்காது போன் பண்ணி மொக்க போடலாம். 

Facebook
"At  Airport. Leaving Coimbatore for Mohan's Reception,waiting  for my  flight" னு ஒரு Status update போடலாம்.

ஏன்டா வெட்டி சீன் போடுறனு கமெண்ட் வரும். அதனால அதை நான் பண்ணல.

நானும் நண்பன் மோகனும், காலேஜ்ல் ஒன்னா அடிச்ச லூட்டிகளை  யோசிக்கிட்டு இருந்தேன். மனம் ரொம்ப பாரம் ஆச்சு. மீண்டும் அவ ஞபாகம் குத்துப்பாட்டு போல கும்மா குத்து ஆடுது
அப்டியே சில வருடம் பின்னால போனேன். 
அவகிட்ட பேசின வார்த்தைகள் அப்டியே நினைவூக்கு வருது . 
என்னமோ நேத்து மீட் பண்ணின  மாதிரி இருக்கு. 
என் வாழ்கைல மறக்க முடியாத தருணங்கள். 


இட்ஸ ஜஸ்ட் ஹப்பென்ட்?

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ..சாரி தான் கட்டுவா..அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

தொடரும் ...