டிஸ்கி: இந்த கதையில் வரும் சம்பவங்கள் பாதி உண்மை மீதி கற்பனை. ஆனால் இதே போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தாலோ அல்லது இந்த கேரக்டர்கள் ஆங்காங்கே உலாவிக்கொண்டு இருந்தாலோ டைரக்டர் பொறுப்பல்ல...
சனி ஞாயறு... ரெண்டு நாள் ஹஸ்டல அவள பத்தி யோசிச்ட்டு இருந்தேன்....
மண்டே எப்போட காலேஜ் போவோம்.... அவள பாப்போம்னு இருந்துச்சு....மண்டேயும் வந்துச்சு...
இதுவரை ட்ரஸில் இருந்து சாப்பாடு வரை எல்லாமே
அம்மா ரெடியா வச்சிருபாங்க. ஒரு ராஜா வீட்டு கன்னுகுட்டிய தான் இருந்தேன். ஆணா இன்று
முதல் என் டிரஸ்அ நானே துவைக்கணும் அயனும் பண்ணனும், என் சாப்பாட நானே பாத்துக்கணும்..
அம்மாவோட அருமை தெரிய ஆரமிச்ச நாள்னு கூட
சொல்லலாம். “வாழ்கை ஒரு வட்டம் டா” னு இளையதளபதி
சொன்னது ஞாபகம் வருது.
எப்படியோ ஒரு வழியா
காலேஜ் கிளம்பிட்டேன். நல்ல படிய தான் காலேஜ்க்கும் போனேன்... என் ராசின்னு ஒண்ணு
இருக்கு எவளோ சீக்கரமா கிளம்பினாலும் லேட்...
This is my prayer to thee, my Lord -- strike, strike at the root of penury in my heart.Give me the strength lightly to bear my joys and sorrows.Give me the strength to make my love fruitful in service.Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.Give me the strength to raise my mind high above daily trifles.And give me the strength to surrender my strength to thy will with love.
தூரத்தில் காலேஜ் பிரேயர் கேட்குது. ப்ரேயர் முடியற வரை வெயிட் பண்ணி, முடிஞ்சதுக்கு அப்புறம் தான் உள்ள போனேன். அதுவரை
செக்யூரிட்டி மணி அண்ணாகிட்ட என்னை நானே அறிமுக படுத்தி பேசிட்டு இருந்தேன்.
உள்ள நுழைந்தவுடன் லெப்ட்ல ஒரு பெரிய workshop. நேரா போன என்னோட பில்டிங். கீழ் ப்ளோர்ல ஒரு பெரிய
டிராயிங் ரூம். அடுத்த ரூம் என்ட்ரன்ஸ்ல Head of the Department. அத தாண்டி போன ஸ்டெப்ஸ். இந்த பில்டிங் முன்னாடி ஒரு
ப்ரேயர் ஹால். இத எல்லாத விட முக்கியமான ஒன்னு ஜெஸ்சி. அவ எங்கனு தேட போய் தான் இத
எல்லாத்தையும் கவனிச்சேன்.
வழியில் எதிரே வந்த ஒருவனிடம் கேட்டேன்..
E.E.E டிபாட்மென்ட் எங்க பாஸ்?
பஸ்ட் ப்ளோர் செகேன்ட் கிளாஸ்....
தேங்க்ஸ் சொல்லி என் கிளாஸ் உள்ள போனேன்.
எல்லாமே கொஞ்சம் வித்தியாசமா இருந்துச்சு. புதுசான
நண்பர்கள், புதுசான சூழ்நிலை காலேஜ் பர்ஸ்ட் டேயே பல நண்பர்கள் அறிமுகமானார்கள்.
நான் போய் சேந்த கேங் இதன்
இவங்கள பத்தி போக போக தெரிஞ்சிக்கலாம்.
இப்ராம்கான்..... பர்ஸ்ட்
டேவே ஒரு பொண்ண புடிச்சிடான். அவளும் ஒரு முஸ்லிம் தான். கண்டதும் காதல்...
கவிதை எழுதுறது என் பழக்கம்னு பேப்பர் பேனா வோட இருந்தான். என்கிட்ட
கவிதையா சொல்லி மொக்க போட்டான்.....
அல்மோஸ்ட் ஹாப் டே போய்டுச்சு. என் கிளாஸ் உள்ள எல்லா பொண்ணையும்
செக் பண்ணியாச்சு. அட்டெண்டன்ஸ் வரைக்கும் வெரிபை பண்ணியாச்சு. ஜெஸ்சி என் கிளாஸ்
இல்ல.
எப்படி டா கார்த்திக் அவ கூட பேச போற பழக
போற... ஒன்னும் புரியல..
ஒரு செகண்ட் யோசிச்சேன்...
நான் ஏன் ஜெஸ்சிஐ தேடுறேன்? அவளுக்கும் எனக்கும் என்ன
சம்பந்தம்? எனக்குள் பல கேள்வி?
இவனோ கவிதை மேல கவிதையா சொல்லி உசுர வாங்குறான்.
லஞ்ச் டைம் வந்துச்சு. காதுல ரத்தம் வராத கொறைய கிளம்பி
வெளியே வந்தேன்.
ஆப்போசிட்ல உள்ள கடைல சாப்டிட்டு கிளாஸ்கு போற வழியில்
எல்லாம் பேசிட்டே போனோம்.
ராஜா: இனாகுறேசன் அன்னைக்கு ஒரு பொண்ணா பாத்தேன் டா.
செம பிகர். அவ எந்த கிளாஸ் மச்சி.
இப்ராம்: ஆமாம் மச்சி அவள தான் நானும் தேடுறேன். அவ
கம்ப்யூட்டர் சயின்ஸ்னு நினைக்குறேன்.
ராஜா: நீ அவள பாத்திய கார்த்திக்?
நான்: இல்ல டா..
(மனசுக்குள்: ஒ..கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆ. அவள தான் காலைல
இருந்து தேடிட்டு இருகேன். இவன் நம்ம கூட தானா காலையில் இருந்து இருந்தான்..இவனுக்கு
எப்டி அவ டிபாட்மென்ட் தெரிஞ்சிச்சு?... அவள இந்த மாதிரி எத்தனை பேரு தேடுறான்களோ.?!?!?!?!....)
மகேன்: இந்த லவ் பண்ணுறவன், பொண்ணுங்க பின்னாடி நாய் மாதிரி
சுத்தறவங்க தயவு செஞ்சி ஓடி போய்டுங்க.
சக்கரவர்த்தி: அவனுங்கள விடு மச்சி. பொண்ணுங்களை பத்தியே
பேசிட்டு...
மகேன், சக்கரவர்த்தி இந்த ரெண்டு பேருக்கும் பொண்ணுங்கனாவே
புடிக்கல. சக்கரவர்த்தி, அவன் அத்தை பொண்ண லவ் பண்ணுறான். அவள பத்தி மட்டும் தான்
பேசுவான்.
மகேன் சுத்தம், எந்த பொண்ண பத்தியும் பேச மாட்டான்.
இப்ராம், ராஜா இவங்க ரெண்டு பெறும் அப்டியே ஆப்போசிட்.
இவங்க ரெண்டு பேரும் எப்போதுமே கேல்ஸ்.. கேல்ஸ்.. கேல்ஸ். வேற எத பத்தியும் பேச
மாட்டனுங்க.
Head of the Department ரூம் வெளியே அன்று பாத்த அதே தேவதை
பட் இன்னிக்கு
வைட் சுடி,
வைட் சாண்டல்,
வைட் Ear ring,
வைட் வாட்ச்,
செம ஸ்லிம்...
மனசுக்குள்: உங்களுக்கு மட்டும் எப்பிடிரி இப்படியெல்லாம்
costume கிடைக்குது?
பின்னாடி நடந்த நான் கொஞ்சம் வேகமா முன்னாடி நடந்தேன்.
வேகமா நடந்து அவள கிராஸ் பண்ணேன்.
நேராக பார்த்து சென்ற அவள் என்ன கிராஸ் பண்ணும் பொது ஒரு
செகண்ட் என்ன பாத்துட்டு போனா...
ஒ மை காட்.. அவ்ளோ அழகு..
அடுத்த நிம்சமே…அப்புறம் என்ன.......லவ் தான்
நான் ஏன் ஜெஸ்சிஐ தேடினேன்னு அப்ப தெரிஞ்சிச்சு...
கண்டதும் காதல் எனக்கு வர கூடாத என்ன?
எஸ் ஐ வாஸ் இன் லவ்...
------------------------------------------------------------
தொடரும் ...



