Tuesday, August 7, 2012

உண்மை எழுதினேன்...(PART 2)

டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல...   

திருச்சிராப்பள்ளி உங்களை அன்புடன் வரவேற்கிறது.



அண்ணா இந்த பஸ் கே.கள்ளிக்குடி போகுமா?

போகும்... போகும்.. முறைத்த படி கூறினார் – கண்டக்டர்

ஏன் இவ்வளோ எரிச்சல்னு மனசில நினைச்சிட்டு என் அப்பாவையும் அம்மாவையும் சீட்ல உக்கார வச்சுட்டு, நானும் போய் உக்காந்தேன்..



சத்திரம் பஸ் ஸ்டான்ட்ல இருந்து பஸ் கிளம்பியது.

திருச்சி இஸ் பேமஸ் பார் பிகர் மச்சி.. ஐ.ஜி காலேஜ் , ஹோலி கிராஸ் காலேஜ் பொண்ணுங்க கைல மாட்டின உன்ன ஓட்டு ஓட்டுனு ஓட்டி எடுத்துருவாங்கடான்னு நண்பன் Sivapunniyam karthikeyan. சொன்னது ஞாபகம் வருது. அவன் இந்நேரம் shanmuga polytechnicல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்
.
என்னப்பா கள்ளிகுடிக்கு இன்னைக்கு இத்தனை பேரு போறீங்க – கண்டக்டர்.

காலேஜ் first டே அதான்.

எந்த காலேஜ் பா..

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் [Infant Jesus polytechnic ]

ஒ புதுசா கட்டிருக்காங்கலே அதுவா..

அதே தான்ணா. வந்துச்சுன சொல்லுங்கணா..

சரி சரி...

இந்த ஐ ஜி அப்புறம் ஹோலி கிராஸ் காலேஜ் விடுற டைம் எண்ணணா?

உன் பேரு என்ன?

கார்த்திக்.. என்று சிரித்தேன்.

தம்பி வந்த அன்னைகே லேடீஸ் காலேஜ்-அ விசாறிக்கிற, இது நல்லதுக்கு இல்லப்பா.

இல்லணா அந்த டைம்ல இந்த பக்கம் வர மாட்டேன்ல..
.
அது சரி.. நம்பற மாதிரி எதாவது சொல்லுனு சிரித்தார் – கண்டக்டர்.

எனது அம்மா முறைக்க...Sivapunniyam karthikeyan.எப்பவும் போலவே தவறான இன்பர்மேசன் கொடுத்துருகான்னு மட்டும் தெரியுது.

பஸ் மார்க்கெட்டை தாண்டி பாலக்கரை, கன்டோன்மென்ட், ரயில்வே ஸ்டேஷன் வழியா சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் வந்தது.

பஸ்சில் இளையராஜாவின் புன்னகை மன்னன் BGM கேட்க அவள் அங்கே அதே பஸ்சில் ஏறினாள்.

அருகில் இருந்த அவ பிரண்டு, “ஜெஸ்சி இந்த பஸ் போகும், பாத்து போஎன்றாள்.

ஜெஸ்சி –
ப்ளூ கலர் சுடிதார்ல வைட் கலர் ப்லோவேர்ஸ்,
வைட் கலர் ஷால்..
ப்ளூ கலர்லையே  வாட்ச்,பொட்டு, இயர்ரிங்,
வைட் கலர் செருப்பு. அவ ரொம்ப 
மேக்அப் இல்லாம சிம்ப்ள ப்ளூ அண்ட் வைட் beautiful சைட் சொல்லுற மாதிரி ஒரு ஸ்லிம் பிகர். 

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ...அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

அவள் அழகு என்ன அப்டியே புரட்டி போட்டுச்சு. ஏனோ என் கண்கள் அந்த ப்ளூ பிகர் கிட்டயே இருந்துச்சு.

பஸ் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பியது.

அவளை பார்த்தவுடன் கவிதை  எல்லாம் எழுத முயற்சி பண்ணேன்.
ஒன்னும் வரல. எனக்கு தெரிஞ்ச ஒரே கவிதை,

“மரத்துல இருக்குது காய்... மரத்துல இருக்குது காய்...
தூங்க தேவ பாய்... தூங்க தேவ பாய்..

பஸ் கருமண்டபம், நேஷனல் காலேஜ், பால் பண்ணை, தீரன் நகர் தாண்டி ராம்ஜி நகர் வந்துச்சு

கண்டக்டர் வந்து கள்ளிகுடி நெக்ஸ்ட் ஸ்டாப்னு சொல்ல..

இவளோ சிக்கரமா காலேஜ் வந்துச்சுனு நொந்த படி இறங்கினேன்.
அவளுக்கு சீட் கிடச்ச சந்தோசம், உதட்டுல சின்ன புன்னகயொட போய் உக்காந்தா.



மறுபடியும் அவள பாக்க முடியுமோ முடியாதோன்னு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். அவ இருக்கும் அந்த பஸ் எண்ண கடந்து போகுது

இங்க எண்ண சொல்லுது...ஜெஸ்ஸி ஜெஸ்சினு சொல்லுதுல என மனசாச்சி வேற சவுண்ட் விடுது. 
என்னங்கட இது First day காலேஜே இப்பிடியா...என்று காலேஜ் நோக்கி போனேன்.

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் இனாகுறேசன்.

உள்ளே நுழையும் போது
இன்விடேசன் இருக்கா? – செக்யூரிட்டி

பேகில் இருந்த இன்விடேசன் காட்டி உள்ளே போனேன்.

உள்ள Buffet  சாப்பாடு ரெடியாக இருந்தது. யார் யாரோ மேடையில் பேசி கொண்டு இருக்க. என் மனமோ ஜெஸ்சியின் மயக்கத்திலே இருந்தது.

Buffet லஞ்ச் எப்டி சாப்டுறதுனு தெரியாத ஒரே காரணத்தால் அந்த Function முடிஞ்ச உடன் சாப்டாமலேயே கிளம்பினேன்.

Monday ல இருந்து காலேஜ் கிளாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு யாரோ சொல்லி கேட்க.. 

சரி கிளம்பலாமா போர வழியில் எதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிடலாம். 

இங்கலாம் சாப்ட எப்படா கத்துக்கபோறனு – அப்பா

நானோ ஜெஸ்சி படிக்கும் காலேஜ்-அ கண்டுபிடிக்கணும்னு யோசிச்சபடி, கத்துக்கிறேன்  கத்துக்கிறேன் ... என சில பல கடுப்புகளில் கிளம்ப எதிரே ஜெஸ்ஸி இதே காலேஜ்க்கு வர்றா !!! 

தொடரும்....

Friday, August 3, 2012

உண்மை எழுதினேன்...(PART 1)

Karthick Leaving to Coimbatore

பள்ளி மற்றும்   கல்லூரி  வாழ்வில்  நடந்த சில  சம்பவங்களே  இந்த  கதையின்  மூல  காரணம்  ஆகும்.


டிஸ்கி: இந்த   கதையில்  வரும்  சம்பவங்கள்  மற்றும்  கதாபாத்திரங்கள்  அனைத்தும்  கற்பனையே! ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல     


இன்று 

சரியான மழை செமஸ்டர் எக்ஸாம் முடிச்சுட்டு  college canteenசுரேஷ் காக  wait பண்ணிட்டு இருந்தேன்.

அவன் வந்தான்
 டேய் எங்கடா மூட்ட முடிச்சோட கிளம்பிட்ட?

Coimbatore போறேன் டா. உன் கார்ல என்ன கொஞ்சம் ஏர்போர்ட் ட்ராப் பண்ண முடியூமா மச்சி ? 

வாட்  Coimbatoreகு  flightல போறியா? அப்டி என்ன முக்கியமான மேட்டர்.

என்  Diploma friend Mohan Reception...
Actuallல இது ஒரு திருட்டு கல்யாணம் தான். பொண்ணு வீட்டுக்கு தெரியாது இன்னும். 
போட்டோ எடுக்க வேற என்ன கேமராவோட வர சொன்னான்.

டேய் முன்னெல்லாம் திருட்டு கல்யாணம் எல்லாம் பயந்து பயந்து பண்ணுவாங்க. நீங்க என்னடானா  reception!.... அதுக்கு நீ  போட்டோ எடுக்க  flightல போற. எல்லாம் கொஞ்சம் ஓவரா  தான் இருக்கு. 


மச்சி அவன் எனக்கு ரொம்ப க்ளோஸ் friendறா.


சரி சரி கார்ல ஏறு.


SRM University இருந்து கார்ஏர்போர்ட் செல்கிறது

நேத்து கூட உன்கிட்ட பேசினேன்   Coimbatore போறத பத்தி ஒன்னும் சொல்லல.
சரி சரி   flight எத்தனை மணிக்கு 

4:10க்கு  மச்சி.

டேய் நீ என்ன லூசாட டைம் இஸ் நவ்   1:30 டா.

மச்சி I know that . என்னால இப்போ வீட்டுக்கு போயிட்டு வர முடியாது . More over I don't trust Chennai City traffic. 

போர் அடிக்குமே டா. 3 மணி நேரம் என்ன பண்ண போற?

சுஜாதா புக்  ஒன்னு இருக்கு. அத படிக்க ஆரம்பிச்சா அப்படியே டைம் போறது தெரியாது மச்சி....

புக் சைஸ் சின்னதா தான் இருக்கு. எப்படியும் அத அரை மணி நேரத்துல படிச்சி முடிச்சிடுவ. அப்புறம் என்ன பண்ணுவ? நீ எதோ கதை எழுத போறனு சொன்னியே என்ன ஆச்சு?

தலைவர் சுஜாதா ஸ்டைல் humor. கௌதம் மேனன் ஸ்டைல்  Narration ல எழுத ட்ரை பண்ணுறேன். ஒன்னும் முடியல மச்சி.

Flightக்கு டைம் இருக்கு. வா அப்டியே ஒரு Barக்கு  போய் இத பத்தி பேசுனா என்ன?

வேணாம் மச்சி கண்டிப்பா நான்  flightஅ  மிஸ் பண்ணிடுவேன் ஆள விடு.

கார் ஏர்போர்ட்  நுழையூம் போது மழை விட்டிருந்தது.


Chennai Airport
சரி மச்சான் ஏர்போர்ட் வந்துடுச்சு. வில் கெட் பேக் டு யூ

மச்சி உன் Wife  எங்க?

அவ already  ஈரோடு போய் அவுங்க  அப்பா வீட்டுல இருக்கா. அவ  Receptionகு அப்டியே வந்துடுவா
.
அட பாவி அப்ப, வீட்டுல நேத்து யாரும் இல்லையா?  சொல்லிருந்த ஒரு FULLலோட வந்துருபேன்ல

மச்சி போதும் உன் ஹெல்ப். தேங்க்ஸ். பை பை.

டேக் கேர் டா . Bye Bye...

காரில் இருந்து இறங்கி ஏர்போர்ட் உள்ளே சென்றேன்.
எனது போர்டிங் பாஸ் வாங்க  Queue வில் நின்றேன்.

HelpDesk: Sir which Seat  do you prefer?

வின்டோ சீட் என்று கேட்டு வாங்கிய உடன் என் மனதில் பல எண்ணங்கள் ஓட தொடங்கியது. பல முறை இந்த சீட்டுக்கு பஸ்சில் அடித்து கொள்வோம்.

ஆனால் அவள் ஒருத்திக்கு மட்டும் தான் இந்த சீட்டை விட்டுகொடுத்து இருக்கேன். ஆனால் இப்போ அவ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது

இதே  coimbatoreகு பல முறைஅவளை தேடிபோயிருபேன். 

போர்டிங் பாஸ் வாங்கிய உடன் சுஜாதாவின் புக்க படிக்க ஆரம்பிச்சேன்.

சுரேஷ் சொன்னது போல் அந்த புக்க 30 நிமிடத்தில் படிச்சு முடிச்சிட்டேன்.

ஒரே  பிகரா இருந்துச்சு. 
எனக்குஅவ ஞபாகம் வந்துச்சு. எவ்ளோ நேரம் அவர்களை சைட் அடிச்சாலும் அவளை போல் ஸ்டைல யாரும் இல்ல ..

இன்னும் ரெண்டரை மணி நேரம் இருக்கு. என்ன பண்ணலாம்னு யோசிச்சேன்
பசங்க யாருக்காது போன் பண்ணி மொக்க போடலாம். 

Facebook
"At  Airport. Leaving Coimbatore for Mohan's Reception,waiting  for my  flight" னு ஒரு Status update போடலாம்.

ஏன்டா வெட்டி சீன் போடுறனு கமெண்ட் வரும். அதனால அதை நான் பண்ணல.

நானும் நண்பன் மோகனும், காலேஜ்ல் ஒன்னா அடிச்ச லூட்டிகளை  யோசிக்கிட்டு இருந்தேன். மனம் ரொம்ப பாரம் ஆச்சு. மீண்டும் அவ ஞபாகம் குத்துப்பாட்டு போல கும்மா குத்து ஆடுது
அப்டியே சில வருடம் பின்னால போனேன். 
அவகிட்ட பேசின வார்த்தைகள் அப்டியே நினைவூக்கு வருது . 
என்னமோ நேத்து மீட் பண்ணின  மாதிரி இருக்கு. 
என் வாழ்கைல மறக்க முடியாத தருணங்கள். 


இட்ஸ ஜஸ்ட் ஹப்பென்ட்?

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ..சாரி தான் கட்டுவா..அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

தொடரும் ...