Tuesday, August 7, 2012

உண்மை எழுதினேன்...(PART 2)

டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ நிர்வாகம்   பொறுப்பல்ல...   

திருச்சிராப்பள்ளி உங்களை அன்புடன் வரவேற்கிறது.



அண்ணா இந்த பஸ் கே.கள்ளிக்குடி போகுமா?

போகும்... போகும்.. முறைத்த படி கூறினார் – கண்டக்டர்

ஏன் இவ்வளோ எரிச்சல்னு மனசில நினைச்சிட்டு என் அப்பாவையும் அம்மாவையும் சீட்ல உக்கார வச்சுட்டு, நானும் போய் உக்காந்தேன்..



சத்திரம் பஸ் ஸ்டான்ட்ல இருந்து பஸ் கிளம்பியது.

திருச்சி இஸ் பேமஸ் பார் பிகர் மச்சி.. ஐ.ஜி காலேஜ் , ஹோலி கிராஸ் காலேஜ் பொண்ணுங்க கைல மாட்டின உன்ன ஓட்டு ஓட்டுனு ஓட்டி எடுத்துருவாங்கடான்னு நண்பன் Sivapunniyam karthikeyan. சொன்னது ஞாபகம் வருது. அவன் இந்நேரம் shanmuga polytechnicல என்ன பண்ணிக்கிட்டு இருக்கான்னு யோசிச்சிகிட்டு இருந்தேன்
.
என்னப்பா கள்ளிகுடிக்கு இன்னைக்கு இத்தனை பேரு போறீங்க – கண்டக்டர்.

காலேஜ் first டே அதான்.

எந்த காலேஜ் பா..

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் [Infant Jesus polytechnic ]

ஒ புதுசா கட்டிருக்காங்கலே அதுவா..

அதே தான்ணா. வந்துச்சுன சொல்லுங்கணா..

சரி சரி...

இந்த ஐ ஜி அப்புறம் ஹோலி கிராஸ் காலேஜ் விடுற டைம் எண்ணணா?

உன் பேரு என்ன?

கார்த்திக்.. என்று சிரித்தேன்.

தம்பி வந்த அன்னைகே லேடீஸ் காலேஜ்-அ விசாறிக்கிற, இது நல்லதுக்கு இல்லப்பா.

இல்லணா அந்த டைம்ல இந்த பக்கம் வர மாட்டேன்ல..
.
அது சரி.. நம்பற மாதிரி எதாவது சொல்லுனு சிரித்தார் – கண்டக்டர்.

எனது அம்மா முறைக்க...Sivapunniyam karthikeyan.எப்பவும் போலவே தவறான இன்பர்மேசன் கொடுத்துருகான்னு மட்டும் தெரியுது.

பஸ் மார்க்கெட்டை தாண்டி பாலக்கரை, கன்டோன்மென்ட், ரயில்வே ஸ்டேஷன் வழியா சென்ட்ரல் பஸ் ஸ்டான்ட் வந்தது.

பஸ்சில் இளையராஜாவின் புன்னகை மன்னன் BGM கேட்க அவள் அங்கே அதே பஸ்சில் ஏறினாள்.

அருகில் இருந்த அவ பிரண்டு, “ஜெஸ்சி இந்த பஸ் போகும், பாத்து போஎன்றாள்.

ஜெஸ்சி –
ப்ளூ கலர் சுடிதார்ல வைட் கலர் ப்லோவேர்ஸ்,
வைட் கலர் ஷால்..
ப்ளூ கலர்லையே  வாட்ச்,பொட்டு, இயர்ரிங்,
வைட் கலர் செருப்பு. அவ ரொம்ப 
மேக்அப் இல்லாம சிம்ப்ள ப்ளூ அண்ட் வைட் beautiful சைட் சொல்லுற மாதிரி ஒரு ஸ்லிம் பிகர். 

.....அவ பேரு ஜெஸ்ஸி.. அவ்ளோ அழகு. கிளாசி..படிச்சவ...அவகிட்ட ஒரு ஸ்டைல் இருக்கு.. செக்ஸி டூ....

அவள் அழகு என்ன அப்டியே புரட்டி போட்டுச்சு. ஏனோ என் கண்கள் அந்த ப்ளூ பிகர் கிட்டயே இருந்துச்சு.

பஸ் சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் இருந்து கிளம்பியது.

அவளை பார்த்தவுடன் கவிதை  எல்லாம் எழுத முயற்சி பண்ணேன்.
ஒன்னும் வரல. எனக்கு தெரிஞ்ச ஒரே கவிதை,

“மரத்துல இருக்குது காய்... மரத்துல இருக்குது காய்...
தூங்க தேவ பாய்... தூங்க தேவ பாய்..

பஸ் கருமண்டபம், நேஷனல் காலேஜ், பால் பண்ணை, தீரன் நகர் தாண்டி ராம்ஜி நகர் வந்துச்சு

கண்டக்டர் வந்து கள்ளிகுடி நெக்ஸ்ட் ஸ்டாப்னு சொல்ல..

இவளோ சிக்கரமா காலேஜ் வந்துச்சுனு நொந்த படி இறங்கினேன்.
அவளுக்கு சீட் கிடச்ச சந்தோசம், உதட்டுல சின்ன புன்னகயொட போய் உக்காந்தா.



மறுபடியும் அவள பாக்க முடியுமோ முடியாதோன்னு யோசிச்சிகிட்டே நடந்து போனேன். அவ இருக்கும் அந்த பஸ் எண்ண கடந்து போகுது

இங்க எண்ண சொல்லுது...ஜெஸ்ஸி ஜெஸ்சினு சொல்லுதுல என மனசாச்சி வேற சவுண்ட் விடுது. 
என்னங்கட இது First day காலேஜே இப்பிடியா...என்று காலேஜ் நோக்கி போனேன்.

இன்பான்ட் ஜீசஸ் பாலிடெக்னிக் இனாகுறேசன்.

உள்ளே நுழையும் போது
இன்விடேசன் இருக்கா? – செக்யூரிட்டி

பேகில் இருந்த இன்விடேசன் காட்டி உள்ளே போனேன்.

உள்ள Buffet  சாப்பாடு ரெடியாக இருந்தது. யார் யாரோ மேடையில் பேசி கொண்டு இருக்க. என் மனமோ ஜெஸ்சியின் மயக்கத்திலே இருந்தது.

Buffet லஞ்ச் எப்டி சாப்டுறதுனு தெரியாத ஒரே காரணத்தால் அந்த Function முடிஞ்ச உடன் சாப்டாமலேயே கிளம்பினேன்.

Monday ல இருந்து காலேஜ் கிளாஸ் ஸ்டார்ட் ஆகுதுனு யாரோ சொல்லி கேட்க.. 

சரி கிளம்பலாமா போர வழியில் எதாவது ஒரு ஹோட்டல்ல சாப்பிடலாம். 

இங்கலாம் சாப்ட எப்படா கத்துக்கபோறனு – அப்பா

நானோ ஜெஸ்சி படிக்கும் காலேஜ்-அ கண்டுபிடிக்கணும்னு யோசிச்சபடி, கத்துக்கிறேன்  கத்துக்கிறேன் ... என சில பல கடுப்புகளில் கிளம்ப எதிரே ஜெஸ்ஸி இதே காலேஜ்க்கு வர்றா !!! 

தொடரும்....

11 comments:

  1. மச்சி யாருடா அந்த ஜெஸ்ஸி...,

    ReplyDelete
    Replies
    1. அது யாருன்னு எனக்கு தெரியும் ...

      Delete
  2. Replies
    1. Ana its not enough, i expect more explanation about jessy/jersy

      from you ...

      Delete
  3. The mentioning of Places/Bus Stop names, helps the reader to get connected with the story better. Good Keep It Up.

    ReplyDelete
  4. Nalla irruku story :) Keep going

    ReplyDelete
  5. கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் சூப்பர்.

    //பஸ்சில் இளையராஜாவின் புன்னகை மன்னன் BGM கேட்க அவள் அங்கே அதே பஸ்சில் ஏறினாள்.// இளையராஜா BGM போட்டு நேரிய பேர் வாழ்க்கைல விளையாடி இருக்கார் !

    // இங்க எண்ண சொல்லுது...ஜெஸ்ஸி ஜெஸ்சினு சொல்லுது // ஜெஸ்ஸி எங்கே இருந்தாலும், இந்த ப்ளாக் கு வந்து கதையை படிக்குமாறு கேட்டு கொள்கிறோம்

    சுரேஷ், கதையை நீங்க எழுதி முடிக்குறதுக்குள்ள, ஜெஸ்ஸி கண்டிப்பா திரும்ப கெடைப்பாங்க! We all will Pray for You :):):)

    ReplyDelete
  6. 'ப்ளூ அண்ட் வைட் beautiful சைட்' - Modern Ilango Adikal

    ReplyDelete

Your Comments Please