Sunday, January 13, 2013

உண்மை எழுதினேன் (பாகம்- 4) - [Karthick Meets Jessi]



டிஸ்கி: இந்த  கதையில்  வரும்  சம்பவங்கள்  பாதி உண்மை மீதி கற்பனை.   ஆனால் இதே  போன்ற  சம்பவங்கள்  உங்கள்  வாழ்க்கையில்  நடந்திருந்தாலோ அல்லது   இந்த கேரக்டர்கள்   ஆங்காங்கே   உலாவிக்கொண்டு   இருந்தாலோ டைரக்டர்  பொறுப்பல்ல...   


ஆறு மாசம் காலேஜ் லைப் நல்ல படிய தான் போச்சு ஆனா ஜெஸ்ஸி கிட்ட தான் என்னால நெருங்கவே முடியல.  
இத்தன நாளா அவள தூரமா தான் சைட் அடிச்சிட்டு இருந்தேன். நண்பர்களுக்கும் என் மேல் கொஞ்சம் சந்தேகம் இருந்துச்சு. அவள சைட் அடிக்காதவன் எவனும் இல்ல. பத்தோட பதினொன்னா என்னையும் நெனச்சி லூசுல விட்டுட்டாங்க.
இப்படியே போய்ட்டு  இருந்த அந்த லைப்ல ஒரு நாள்...
வழக்கம் போல் இல்லாம அவ ஏறுற பஸ் ஸ்டாப்கும் நெக்ஸ்ட் ஸ்டாப்ல வெயிட் பண்ணேன். அவ போற பஸ்ல போய் அவள பாத்துகிட்டே போணும்னு ஒரு சின்ன ஆசைல..
ரொம்ப நேரம் வெயிட் பண்ணதுக்கு அப்புறம் ஒரு கூட்டமே இல்லாத பஸ் வந்துச்சு.. அவ இல்லன்னு தெரிஞ்சது. அதுல இருந்த சில பிரெண்ட்ஸ் என்னை ஏற சொன்னங்க. பிரெண்ட்க்கு வெயிட் பண்ணுறேன்னு ஒரு பொய்ய சொல்லி எஸ்கேப் ஆனேன்.
தூரத்துல கூட்டமா ஒரு பஸ் வந்தாலே அது நான் ஏற வேண்டிய பஸ்ஸா தான் இருக்கும். நெனச்சது போல் அதுல அவ இருந்தா. ஒட்டு மொத்த காலேஜ்ம் அந்த பஸ்ல இருந்தது.
பஸ் நின்னது ஒருத்தனும் இறங்கல ஒருத்தனும் ஏறல.புட்போர்டுல கூட நிக்க இடம் இல்ல. பஸ்லந்து ஒரு சவுண்ட் மட்டும் வந்துச்சு. மச்சான் அடுத்த பஸ்ல வாடான்னு. குரல கேட்ட இப்ரம் போல இருந்தது.
[மனதில்] - ஒ அவன், அவன் ஆள கரெக்ட் பண்ண அந்த பஸ்ல வரான்.  
கண்டக்டர் விசில் அடிக்க பஸ் கிளம்பியது. இந்த பஸ்ஸ விட்டா லைப்ல ஏதோ மிஸ் பண்ண போற மாதிரி இருந்துச்சு. ஓடி போய் பஸ்ல ஏற முயற்சி பண்ணேன். பட் என்னால முடியல.. அடுத்த பஸ்ல வா பான்னு நாலு பேரு திட்டி என்ன ஏற விடல..
அன்றும் வழக்கம் போல் லேட்........
ஒரு நாள் மதியம் லைப்ரரில ஜெஸ்ஸிய தனியா மீட் பண்ணேன். இந்த சான்ஸ்ஸ விட கூடாதுன்னு அவ கிட்ட பேச முயற்சி பண்ணேன்.
Phonetics and English… ஒரு புக் படிச்சிகிட்டு இருந்தா. தைரியத்த வர வச்சிக்கிட்டு போய் பேசினேன்.
எக்ஸ்குயூஸ் மீ...இந்த புக்க இங்க படிச்சிட்டு ரிட்டன் பண்ணிடிவிங்களா   இல்ல எடுத்துட்டு போய்டுவிங்களா? இந்த புக்க ரொம்ப நாலா தேடிகிட்டு இருக்கேன். [மனதில்] -(அந்த புக் எதபத்தினு கூட தெரியாது)
ஜெஸ்ஸி: (என்னிடம் கேட்ட முதல் வார்த்தை) நீங்க எந்த டிபாட்மென்ட்?
நான்: ட்ரிப்ல்இ. மை நேம் இஸ் கார்த்திக்? யுவர் நேம்?
ஜெஸ்ஸி: லுக் கார்த்திக். எங்க டிபாட்மென்ட்ல மத்த டிபாட்மென்ட் பசங்க கூட பேச கூடாதுன்னு சொல்லிருக்காங்க? நீங்களும் எதுக்கு வந்து தேவை இல்லாம பேசுறீங்கன்னு எனக்கும் தெரியுது. சோ ப்ளீஸ் கீப் அவே? ன்னு சொல்லி புக்க டேபிள்ல வச்சா.
நான்: [மனதில்] – (இந்த புக்க ஏன் தள்ளி வைக்கணும்னு சொல்லுரா...) என்னங்க இப்டி பேசுனா எப்டி? அப்போ மத்த டிபாட்மென்ட் உங்கிட்ட எப்டிங்க பேசுறது?
ஜெஸ்ஸி: ஏன் பேசணும்? லுக் ட்ரிப்ல்இ மெக் பசங்க கொஞ்சம் ரௌடி பசங்களா இருப்பாங்கன்னு என் கிளாஸ் மேட் அட்வைஸ் பண்ணிருக்காங்க
நான்: [மனதில்] – (எனக்கு முன்னாடி எத்தனை பேரு  இந்த புக்க கேட்டான்களோ தெரியல.. இப்பிடி எரிஞ்சி விளுரா) சரி மேடம் நீங்க கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்குறிங்க ... சாப்ட்வேர் இஞ்சினியர், ஏசி ரூம்ல வொர்க் பண்ணுவிங்க. நாங்க ட்ரிப்ல்இ முடிச்சிட்டு ரௌடியிசம் பண்ண போய்டுவோம்.. நம்ம பஸ்ட் இயர் தான் படிக்குறோம் காமன் சிலபஸ்  காமன் சப்ஜெக்ட் தான். இன்னும் ரௌடியிசம் பேப்பர் வரல...அது வரைக்குமாவது நீங்க பதில் சொல்லலாம்..
ஜெஸ்ஸி: (ஜோக்குக்கு சிரிச்சா பட் காட்டல) அதே கோவத்துடன் உங்களுக்கு புக் வேணுமா போய் லைப்ரரில ரிசப்சன்ல செக் பண்ணுங்க. என்கிட்ட கேக்காதிங்க.
நான்: தேங்க்ஸ்..................
இவ்நிங் ஒரு நாள் கூட அவ போற பஸ்ல போனது இல்ல. என் கேங் அந்த நாலு பேரோட தான்
எல்லா பசங்களும் போனதுக்கு அப்புறம் தான் நாங்க கிளம்புவோம்..
சோ இவ்நிங் ஜெஸ்ஸிய பஸ்ல பாக்க வழியே இல்ல...
ஒரு நாள் என் பிரண்ட்ஸ் யாரும் வரல. தனியா தான் இவ்நிங் போனேன். ஜெஸ்ஸி மட்டும் பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணிட்டு இருந்தா. இது ஒரு நல்ல சான்ஸ் வேகமா நடந்தேன் வழியில மேரி (என் கிளாஸ் மேட்) மீட் பண்ணேன்.
மேரி: என்ன கார்த்திக் இன்னைக்கு உன் பிரண்ட்ஸ் யாரும் இல்ல
நான்: எஸ் மேரி, எல்லாம் சொல்லிவச்ச மாதிரி லீவ்.
மேரி: நீ இந்த டைம்க்கு வரும் போதே எனக்கு தெரியும்.
நான்: சரி வா வீட்டுக்கு தான போற அடுத்த பஸ் புடிக்கலாம்.
மேரி: அதுக்கு சான்ஸ்எ இல்ல
நான்: பட் ஒய்?
மேரி: நீ இதுக்கு முன்னாடி இந்த டைம்க்கு போனது இல்லல அதான் உனக்கு தெரியல
நான்: ஒன்னும் புரியல
மேரி: நீ வேணா இந்த பஸ்ல போ. நான் அடுத்த பஸ்ல வரேன்.
நான்: சத்தியமா புரியல... எனிஹவ் ஐ ம் லீவிங் நவ்.. ஓகே
மேரி: ஓகே
பேசிகிட்டே நானும் மேரியும் பஸ் ஸ்டாப்க்கு வந்தோம். பஸ் ஸ்டாப்ல யாரும் இல்ல.
இருந்த ரெண்டு முணு பேரும் அருகில் இருந்த பொட்டி கடைல இருந்தாங்க.
மேரி மட்டும் இல்லனா இது ஒரு நல்ல சான்ஸ். கண்டிப்பா ஜெஸ்ஸி கிட்ட எதாவது பேசிருப்பேன்.
மேரியும், ஜெஸ்ஸியும் கொஞ்ச நேரம் எதோ பேசிகிட்டாங்க. basicalலா  அவங்க ரெண்டு பெரும் பொண்ணுங்க அந்த ஒரு எளிஜப்ளிட்டி போதும் ரெண்டு பேரும் பேசிக்க. மேரி என்ன இன்ட்ரோ கொடுப்பானு நினச்சேன், பட் அவ அத பன்னல...
துரத்துல ஒரு பஸ் வருது. 
நான்: மேரி வா இந்த பஸ்ல போலாம். பஸ் ப்ரீயா தான் இருக்கு, பஸ் ஸ்டாப்ளையும் கூட்டமே இல்ல..
மேரி: நீ போ கார்த்திக். ஐ வில் கேட்ச் தி நெக்ஸ்ட் பஸ்.
நான்: ஒய்..?!?!!?! ஓகே பாய் மேரி...
சந்தோசமா பஸ்ல ஏற போனேன்.
ஜெஸ்ஸிகிட்ட பஸ்ல யாவது எதாவது பேசலாம்னு.
ஜெஸ்ஸி முன்னால ஏறுனா, நான் பின்னால ஏற போனேன்.
எங்கிருந்து வந்தானுங்கனு தெரியல ஒரு கூட்டமே என்ன தள்ளி விட்டுட்டு பஸ்ல ஏறினது. கொஞ்சம் நேரத்துல பஸ் புல் புட்போர்ட்ல கூட இடம் இல்ல.


மறுபுடியும் புட்போர்ட்.. கொஞ்சம் பயமா இருந்துச்சு. ஏற தெரியமா ஏறி திட்டு வாங்கி எறங்கினேன்..பஸ் ஸ்டாப் ல போய் உக்காந்தேன்.
மேரி என்ன பாத்து நக்கலா சிரிச்சா..
அவ சிரிப்பிலே புரிஞ்சது இது டெய்லி நடக்கருது தானு. இப்போ வரைக்கும் பஸ் ஸ்டாப்ல யாரும் இல்ல. இப்போ இத்தனை பேரு எங்கேந்து வந்தானுங்க..ஒன்னும் புரியல
மேரி: இது தினமும் நடக்கருது தான் கார்த்திக்... எல்லோரும் இந்த டி கடை உள்ள தான் இருப்பாங்க. அவ பஸ் ஏறுன உடனே கூட்டம் அந்த பஸ்ல தான் இருக்கும்...என்ன கார்த்திக் நியும் அவ பின்னாடி சுத்துரியா  என்ன?
நான்: வாட்... எவ பின்னாடி?
மேரி: அவ தான் ஜெஸ்ஸி? கம்ப்யூட்டர் சயின்ஸ் டிபாட்மென்ட் பிகர்...
நான்: நோ நோ.... என்ன பாத்த அப்டியா இருக்கு? அவ என்ன பெரிய ?....(மனசு வலிச்சது இப்டி பேச)
மேரி: அவளுக்கு என்னப்பா  ஒரு பொண்ணு இன்னொரு பொண்ண பாத்து சைட் அடிக்கற அளவுக்கு பிகரா இருக்கா....
நான்: (கேக்க கொஞ்சம் சந்தோசமா இருந்தாலும் வெளில என்னால சொல்ல முடிச்சந்து) ஐ டோன்ட் கேர்.
அடுத்த பஸ் ப்ரீயா வர மேரி அதுல போலாம்னு சொன்னா. எனக்கு கொஞ்சம் வேல இருக்குனு சொல்லி நான் மட்டும் பஸ் ஸ்டாப் ல இருந்தேன்.
மேரி, வந்த பஸ்ல ஏறி போய்ட்டா...
நான் மட்டும் பஸ் ஸ்டாப் ல தனிய யோசிச்சேன்.
எப்டி பாத்தாலும் அவள நெருங்க முடியாது போல...கொஞ்சம் கூட வாய்ப்பே இல்ல. லைப்ரரில சிரிப்போட கோவம் கலந்து பேசனது நியாபகம் வந்துச்சு..கொஞ்சம் நம்பிக்கையும் வந்துச்சு.
வாய்ப்பு எதிர்பாக்குறவன் முட்டாள்.
கெடைச்ச வாய்ப்பை யூஸ் பண்ணுறவன் அதிஷ்ட சாலி...
வாய்ப்பை உருவாக்குறவன் புத்தி சாலி...
வாய்ப்பை எதிர் பாக்கறத விட்டுட்டு உருவாக்கணும்னு  நினச்சேன்...உருவாக்கினேன்....


------------------------------------------------------------
தொடரும் ...

2 comments:

  1. machan chance illa da .... sema intresting da machi ... adutha episode eppo da varum ....

    ReplyDelete

Your Comments Please